Saturday, March 23, 2019

SRIMADH BAGAVATHAM 10 TH CANTO



ஸ்ரீமத்   பாகவதம்    J K SIVAN 
10 ஸ்கந்தம் 
                                                                    
                     கண்ணா, கருமை நிற வண்ணா 

ஸ்ரீமத் பாகவத  11 ஸ்கந்தங்களில்  பத்தாவது  ஸ்கந்தம்  கிருஷ்ணனின்  லீலாவிநோதங்களை சொல்கிறது. அவற்றை முழுதுமாக  அனுபவிக்க  அதிக நேரம் தேவை.  சுருக்கமாக  முக்கியமான  கட்டங்களை  எடுத்துச்செல்ல  ஒரு முயற்சி தொடங்கியுள்ளேன்.

பூர்வ பீடிகையாக  கிருஷ்ணன் பற்றி  சில எண்ணங்கள் 

கனவு என்பதே  விழிப்பு நிலையில் கண்டத்தின் பிரதிபலிப்பு. எதெல்லாம் ஐம்புலன்கள் அனுபவித்ததோ  அதன் மறு ஒளி பரப்பு. தூக்கத்திலிருந்து விழித்தபின் கனவு காட்சிகள் மறந்து போய்விடுகிறது.  இந்த மறதியை  அபஸ்ம்ரிதி என்பார்கள்.
கனவு எப்படியோ அப்படித்தான்  ஒன்றன்பின் ஒன்றாக  நாம் எடுக்கும் மறு பிறவிகளுக்கு. முந்தைய பிறவிகளின் அனுபவங்கள் மறந்து போகும்.அலை பாயும் நீரில்  மேலே உள்ள  சந்திரன் சூரியன் பிம்பங்கள் தெரியாது. அசையாத தெளிந்த நீரில் மேலே உள்ளவை அழகாக தெரிகிறது.  தெளிந்த ஆழ்ந்த மனதில் பழையவை நினைவுக்கு வரும். ஞானிகள் திரிகாலமும் அறிவது இப்படித்தான்.  மன அலைச்சல்  உளைச்சல் தீர  மாதவனின் திருவடி மனதில் நிலையாக இடம் பெறவேண்டும்.  கருட புராணம், நாரதீய புராணம் எல்லாம் இதைத்தான் சொல்கிறது. கண்ணனை போற்றி  பாடுவது, பேசுவது, நினைப்பது,  கேட்பது,  சொல்வது, எழுதுவது,   இது தான்  அவனை நம் மனதில்  இணைத்துக்கொள்ள உபாயம்.இது நம்மால் நிச்சயம் முடியும். 

கிருஷ்ணனை நினைத்தால்  நம் கண் முன் தோன்றும் காட்சிகள் சில சொல்கிறேன்: 

பூமி பாரத்தை குறைக்க  பூமாதேவி  பிரம்மாவுக்கு  வாக்கு கொடுத்து  நிறைவேற்றுவது. மகா பெரிய குருக்ஷேத்திர  யுத்த களத்தில்  நிராயுதபாணியாக  தேரோட்டுகிறான்.  எதிரிகளை வெல்ல யுத்த முறைகள் சொல்லித்தருகிறான். அதே சமயம் வாழ்க்கைக்கு  நமக்கு உதவும்  கர்மா, ஞான, பக்தி யோகத்தை பற்றி சொல்கிறான்.  அவன் பால்யத்தில் கோகுல பிருந்தாவன வ்ரஜ பூமிகளில், கோபர்கள் கோபியருடன் களித்து  விளையாடிய சம்பவங்கள், சர்வ சாதாரணமாக  பெரிய ராக்ஷஸர்களை வதம் செய்தது, யசோதைக்கு நல்ல பிள்ளையாய் நடந்து விஷமம் செய்து  கயிற்றால் கட்டப்படுவது, பசு நேசம்,  சாந்திபனி முனிவரிடம் பாடம் கற்பது, குசேலர் நட்பு, கம்ச வதம், விருஷ்ணி யாதவ குலம் நிர்மூலமாக செய்வது  சகலமும் எப்படி  ஒன்றுக்கொன்று இணைகிறது. அசாத்திய  மாயா மனுஷ்யன் கிருஷ்ணன்.   நமக்கும் பரிசு கொடுத்தவன் கிருஷ்ணன்.  பகவத் கீதை மட்டும், விஷ்ணு சஹஸ்ரநாமம் பீஷ்மர் மூலம் நமக்கு கிடைக்க வைத்தவன்  அவன் தான்.

No comments:

Post a Comment