Sunday, September 9, 2018

RASANISHYANTHINI

ரஸ  நிஷ்யந்தினி                                   J.K. SIVAN                       
பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள்

பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் ப்ரவசனத்தை கேட்ட மஹான்  ராஜு சாஸ்திரிகள் கண்களில் ஆனந்த கண்ணீர் வடித்தார். ''உன்னை நான் அறியவில்லை.   மகரிஷி விஸ்வாமித்ரர்  தசரதனிடம்  உன் மகனை நீ அரியமாட்டாய்  நான் அறிவேன்  ''அஹம் வேத்மி''  என்று  அவர் கூறியதைத்தானே  ஸ்ரீ ராமனின்  100 கல்யாண குணங்களாக ரஸ  நிஷ்யந்தினியில் நாம் அறிகிறோம்.   இது வரை 75 அற்புத காரணங்களை நாம் அறிந்து மேலே இனி தொடரப்போகிறோம்.

அதற்குமுன்   ஸ்ரீ மன்னார் குடி பெரியவா,  தான்  ஸ்ரீ க்ரிஷ்ணசாஸ்திரிகளை  கோபித்ததற்கு 

வருந்துவதை அறிகிறோம்.

''கிருஷ்ணா, நான் உன்னை அறியாமல் தவறிவிட்டேன்.   நீ   மஹானுபவன். ராமனைப் போலவே நீயும் கீர்த்தியுடன் கோடானுகோடி மக்களுக்கு மங்களத்தை அளிக்க போகிறாய்''  என்று  மனமார ஆசீர்வதிக்கிறார். குருவின் ஆசிர்வாதத்தில் க்ரிஷ்ணசாஸ்திரி நாடெங்கும் பிரயாணம் செயது ஸ்ரீ ராமன் பெருமைகளை பிரவசனம் செய்து புகழ் பெறுகிறார்.  நிறைய தான தர்மங்களை செய்கிறார். எளிமையான வாழ்க்கையை மேற்கொள்கிறார். பருத்தியூர் கோவில் அபிவிருத்தி, புனருத்தாரணம் அவரால் தான் நிறைவேறியது. 

ஒருநாள் தன்னிடமிருந்த ஒரே  ஒரு  நல்ல புடவையை  துவைத்து கொடியில் உலர்த்தி வைத்து விட்டு  ஸ்நானம் செய்ய சென்ற நேரத்தில் வாசலில் யாரோ ஒரு ஏழை பிச்சைக்காரி வந்து யோசிக்கிறாள். அவளை கிழிந்த பழைய  அரைகுறை புடவையில் கண்ட கிருஷ்ண சாஸ்திரி, மறுயோசனை இல்லாமல் தன் கண்ணில் பட்ட  மேலே கொடியில் தொங்கிய  மனைவியின் ஒரே நல்ல புடவையை எடுத்து அந்த ஏழைக்கு தானம் செய்துவிட்டார்.   குளித்து விட்டு வந்து புடவையை தேடிய மனைவி எங்கே இங்கிருந்த புடவை என்று அவரை கேட்க '' உன்னை விட அதிகமான அவசியத்தோடு தேவையாக இருந்ததால் ஒரு ஏழை பிச்சைக்காரிக்கு அதை எடுத்து கொடுத்து விட்டேன் '' என்கிறார்.

''என்னிடம் இருந்த மாற்று புடவை அது ஒன்று தானே. இப்போது எதை உடுத்திக் கொள்வேன்'' என்று அந்த மாதரசி  வருந்துகிறாள்.

''கவலைப்படாதே, ஸ்ரீ ராமன் கொடுப்பான்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் அந்த மஹான். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை.  வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது.   யாரோ ஒரு பக்தர் மனைவியோடு வண்டியிலிருந்து இறங்குகிறார். 

''ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் வீடு இது தானே ''
''ஆமாம்  நான் தான் அது''
''உங்கள் ப்ரவசனத்தை  ஊரில் கேட்டேன். உங்களை நேரில் வந்து வணங்கி ஆசிர்வாதம் பெற நாங்கள் வந்திருக்கிறோம் என்று அந்த தம்பதிகள் அவர் பாதத்தில் விழுகிறார்கள். அவர் பாதத்தில் ஒரு தாம்பாளத்தில்  பழம் பாக்கு வெற்றிலை, ஒரு நல்ல பட்டு புடவை, ரவிக்கை துணி,  அவருக்கு ஜரிகை வேஷ்டி அங்கவஸ்திரம் அளித்து  ஆசி பெற்று திரும்புகிறார்கள்.

கிர்ஷ்ண சாஸ்திரிகள்  மனைவியிடம்  தாம்பாளத்தைக் கொடுத்து  ''பார்த்தாயா ஸ்ரீ ராமன் உனக்கு வஸ்திரம் அனுப்பிவிட்டான்  என்று புன்னகைக்கிறார்.

இனி விஸ்வாமித்ரர் மேலும் தசரதனுக்கு  தனக்கு தெரிந்த  ஐந்து காரணங்களை காட்டி ராமன் சாதாரணன் அல்ல என்று சொல்வதை மட்டும்  பார்ப்போம்: 

76   ''தசரதா, உன் மகன் ராமனை  எல்லோரும் கண்களால் பார்த்து அறிகிறார்கள் என்றா நினைக்கிறாய்,  நம் கண்ணுக்கு தெரியும் உருவமா ஸ்ரீ ராமன். இல்லை அப்பனே,  எவராலும் காண முடியாதவன் அவன். பரிபூர்ண  ஞானிகள் மட்டுமே அவனை மனதில் கண்டு பரமானந்தம் அடைகிறார்கள். வெறும் உருவம் அல்ல ஸ்ரீ ராமன்''

77.  என் மகன் ராமனை தெரிந்தவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள் என்று நினைக்கிறாயே ,  எனக்கு தெரிந்ததைச்  சொல்கிறேன் கேள்.  யாரெல்லாம் ஸ்ரீ ராமனை  தங்களது ஆத்மஸ்வரூபமாக அறிகிறார்களோ, அவர்கள் அழிவற்றவர்கள்''

78. ஸ்ரீ ராமனை மனதாலும் பேச்சினாலும் அறிய முடியும் என்றா நம்புகிறாய் தசரதா , அப்படி இல்லை, கண்ணால் கண்டோ, மனதால் நினைத்தோ,  வாயினால் அவனைப் பற்றி பேசியோ ஸ்ரீ ராமனை நெருங்க முடியாது.  அவன் இருக்கிறான் என்ற  பரிபூர்ண பக்தியோடும் நம்பிக்கையோடும் எவன் அவனை வணங்குபவனுக்கு மட்டுமே ஸ்ரீ ராமன் தெரிவான். 

79. அயோத்தியில்  அரசாணி மண்டபத்தில்  உன் மகன் ராமன் நல்ல புகழுடன் சிறந்த அரசன் என்று பெயர் பெறுவான் என்று நினைக்கிறாயா? தசரதா , பக்தனின்  ஆழமான  ஹ்ருதய குகையில் அல்லவோ அவன் வாழ்கிறான் என்பதை முற்றுமுணர்ந்த ஞானிகள் மட்டுமே அறிவார்கள்.  

80. ஸ்ரீ ராமன்  அநீதிமான்களை  தண்டிப்பவனாகவா காண்கிறாய். தசரதா , ஸ்ரீ ராமன் யார் தெரியுமா?  மரணமற்ற நிலையான வாழ்வு அவர்களும் பெற  பொறுமையோடு உதவும்   பாலம் தான் ஸ்ரீ ராமன். இதை நான் அறிவேன். 

No comments:

Post a Comment