Tuesday, September 19, 2017

18.9.17 விசேஷம்



                                     18.9.17 விசேஷம்

நேற்று செப்டெம்பர் 18ம் தேதி நிறைய விஷயங்கள் நடந்தன.

டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை அழித்துவிடுவேன் என்கிறார்.



ரோஹிங்கியா அகதிகள் மேல் ஒரு கண் வைப்பேன் என்கிறார் ஷேக் ஹசீனா பங்களாதேஷில்.

பாகிஸ்தானில் சிந்து  மாகாண சிமெண்ட் தொழிற்சாலை வெடிகுண்டால் ஐந்து பேர் மரணம் 

நம் ஊரில் 18 பேர் வேலையில்லாமல் வேலையிழந்தார்களாம். 

ஒரு ஹெலிகாப்டரிலிருந்து  தவறுதலாக  ரஷ்யாவில்  எங்கோ ஒரு ஓரமாக  நிறுத்திஇருந்த  மோட்டார்கார்களை சுட்டார்களாம். 

உலகில்  அதிக வயதான 117  வயது முதியவர் ஜமைக்காவில் கடைசியாக மூச்சு விட்டார்.

எங்கள் தெருவில் ஒரு நாய்  மூன்று குட்டி போட்டது.

இதற்கிடையே ஒரு சம்பவம் முக்கியமானது.   நான் 78லிருந்து நக்ஷத்ர கணக்குப்படி 79க்குள் நுழைந்தேன். கோவிலில் ஒரு அர்ச்சனை. அதோடு சரி.

No comments:

Post a Comment