Friday, August 18, 2017

நாட்டிலேயே சிறந்த பிரஜை ​




  நாட்டிலேயே சிறந்த  பிரஜை ​- j.k. sivan 

​அடேடே  நான்  ஏதாவது ஒரு ராஜா கதை சொல்லி ரொம்ப நாளாச்சு இல்லை?

இப்போ ஒரு குட்டி கதை சொல்றேன்.


நமது தேசத்தில் எங்கோ ஒரு குட்டி பிரதேசம்.   ஊர்.   அதற்கு அவன் ராஜா.  அவன் ஒரு விசித்திர  பேர்வழி. 

திடீரென்று அவனுக்கு ஒரு நாள் ஒரு  ஐடியா வந்தது.   தனது குடிகளில் ஒரு சிறந்த ஆசாமி ஒருவனுக்கு  மரியாதை செய்ய விருப்பம் கொண்டான். ஒரு நாள் குறித்தான். திமு திமுவென்று கூட்டம். ராஜா  அவர்களை எல்லாம் வடிகட்டி  கடைசியில் நாலே பேர். இவர்களில் யார் நமது தேசத்திலேயே உயர் தரமாக  சிறந்தவன்?

​நேரில்  தானே  தேர்வு நடத்தினான் ராஜா.  முதலாவது  ஆள் ஒரு பணக்காரன் மட்டுமில்லை.  தர்மிஷ்டனும் கூட.  நிறைய தான தர்மம் செய்தவன். ராஜாவின் ஊரில் அவனுக்கு நல்ல பேர். 

​ரெண்டாவதாக அந்த ஊரிலேயே  பிரபலமான  ஒரு  மருத்துவன். ரொம்ப காசு எதிர்பார்க்காமல்  நிறைய  பேருக்கு  நோய் தீர  வைத்தியம் பண்ணியவன். சில உயிர்களை காப்பாற்றினவன்.​ கைராசி கனக சபை என்று பெயர். 

​மூன்றாவதாக ஒரு  நீதிபதி. வயதானவர். நியாயமானவர். அவர் நீதிகள் எல்லோராலும் போற்றப்பட்டவை. அதிகம் பேசாத புண்ய கோடி முதலியார். 

​யார்  அந்த நாலாவது ஆசாமி என்று ராஜா கூர்ந்து பார்த்தபோது அவன் கண்ணில் பட்டவன் இல்லை  'பட்டவள். '
அவள்  ஒரு  ஏழைக் கிழவி.  கிழிசல் புடவை. ஆபரணம் ஒன்றும் இல்லை.  சீ,  இவளையா  நமது தேசத்தின் சிறந்த பிரஜை என்று தேர்வு செய்வது? அப்படி என்ன சிறப்பு இவளிடம் மற்ற மூன்று பிரமாதமான ஆட்களை விட.?  

எங்கே அந்த முட்டாள் மந்திரி?  எதற்கு இப்படி ஒரு கிழவியை இங்கே கூட்டிவந்து என்னை அவமதித்தவன்.  
மந்திரியை  அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு  மீண்டும் அந்த இளம் ராஜா அந்த கிழவியை பார்த்தான்.

 அவள் கண்களில் தயை, கருணை, புன்சிரிப்பு. பாசம் பொங்கி வழிந்தது. ஏதோ ஒரு தன்னம்பிக்கை !

ராஜா தீர விசாரித்தான். விஷயம் அறிந்து ஆச்சர்யப்பட்டான்/ 

அவள்  மற்ற மூன்றுபேரின்  ஆரம்ப  பள்ளி  ஆசிரியை.  அந்த மூன்று பிரபலங்கலுக்கு  எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்தவள்,

No comments:

Post a Comment