Thursday, January 3, 2013

குட்டி கதை 67 உங்கள் மகன்




குட்டி கதை   67             உங்கள் மகன் .

இது நடந்தது  ஸ்ரீவாஸ்  என்ற  பக்தர்  வீட்டில்.  சைதன்யர் தனது  சிஷ்யர்களோடு  அந்த வீட்டில் கிருஷ்ண பஜன்  நடத்திக் கொண்டு  ஆனந்தமாக   ஆட்டமும்  பாட்டமுமாக  கிருஷ்ணனோடு  ஒன்றி இருந்தார்.  ஸ்ரீவாஸ்  வீட்டில் வேலை  செய்யும் பெண்மணி  மெதுவாக  அவரை அணுகி  உள்ளே வருமாறு  அழைத்தாள்.  ஸ்ரீவாசின்  பிள்ளைக்கு  காலரா.  சற்று நேரத்தில்  மரணம் நிச்சயம். அவர் மனைவி  அழுகிறாள்.  "இது  இறைவனின் முடிவு.   ஒரே  ஆறுதல்  அவன்  உயிர்  பிரியும் நேரத்தில்  நமது  வீட்டில்  சைதன்ய பிரபுவின்  கிருஷ்ண கானம் நடைபெறுகிறது. அதை கேட்டு அவன் உயிர்  பிரிய அவன் கொடுத்து வைத்தவன். அவ்வளவு தான்"  ஸ்ரீவாஸ் மீண்டும் கூடத்துக்கு  வந்து  சைதன்யர் பஜனையில் கலந்து கொண்டு ஆடி பாடலானார். சில மணி நேரங்களில் அந்த  பையன்  இறந்து விட்டான்  அங்கிருந்த  சிலருக்கு  விஷயம்  கசிந்து விட்டது. ஒவ்வொருவராக பஜனையை  மெதுவாக  நிறுத்த  "ஏன்   இன்று கிருஷ்ணனின்  கானாம்ருதம்  வழக்கம் போல்  இல்லையே " என்று  கௌரங்கர்  பஜனையை  நிறுத்தி  மனதில்  வருத்ததோடு  கேட்கும் போது  ஸ்ரீவாஸ்  எதிரே நின்று கொண்டிருந்தார். ஒரு  பக்தர்  "இங்கே  ஒரு துக்கமான  நிகழ்வு  நடந்தது"  என்று சொல்ல  சைதன்யர்  "அப்படியா?"  என்று  ஸ்ரீவாசை கேட்டார்.  ஸ்ரீவாஸ்  கிருஷ்ண பரமாத்மாவின்  பஜனாவளி  நடக்கும் இடத்தில்  எந்த சோகம் துக்கம்  நெருங்கமுடியும்  அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொன்னார். அருகில் நின்ற  பக்தரோ  “சுவாமி,  ஸ்ரீவாசுடைய ஒரே மகன் ரெண்டு மணி நேரம் முன்பு  மரணமடைந்து விட்டான்."  
"என்ன,  பையன் இறந்துவிட்டானா?  ஹே   கிருஷ்ணா மஹா ப்ரபோ"   என்றவர்  கண்ணில்  தாரை தாரையாக  கண்ணீர்.
"எங்கே  அந்த  பையனின்  உடல்?"
"என்  அருமை  செல்வமே  என்ன நடந்தது சொல்?  என்று  சைதன்யர் அந்த  உடலை கேட்டார்
"சுவாமி,  நான் இந்த உடலை விட்டு  மேன்மையான இடம்   செல்ல உதவினீர்கள். பிரபு  என்  ஆத்மா  தங்கள் சரணார விந்தங்களில்  என்றும்  நிலைத்திட அருளவேண்டும் "   இதுவரை பேசிய  அவன்  ஆத்மா பரமானந்தத்தோடு உடலிலிருந்து விடைபெற்றது.
 ஸ்ரீவாஸ்- மாலினி தம்பதிகளை அணைத்துக் கொண்டு சைதன்யர்,  "எதற்கு வருத்தம் இதோ உங்கள் முன்னால் நான் நிற்கிறேனே  உங்கள் மகனாக  என்னை ஏற்று கொள்வீர்களா?" என்றார்.

No comments:

Post a Comment