Sunday, December 23, 2012

MORAL STORY 58 காலத்தில் உதவி



குட்டி கதை  58       காலத்தில் உதவி

அதை  அதிர்ஷ்டம்  என்று சொல்வதா, இல்லை, தெய்வச்செயல்  என்று  புரிந்து கொள்வதா?   சிலர்  கூடி  நின்று பேசுவது  அந்த  பக்கமாக வந்த  அர்ஜுனன் காதில்  விழுந்தது.  நாளை  இந்த  மாளிகை  தீ இடப்படும்.  துரியோதனனின்ஆட்கள் இதற்கு  தயார் செய்யப் பட்டனர்.    விரைவில்  இந்த  சேதியை   மற்ற   பாண்டவர்க்கு அர்ஜுனன்   அறிவிக்க   உடனே அவர்கள் செயல் பட்டனர்.  நேரம்  நழுவுகிறதே.  ஒரு நாளில்,  ஒரு  இரவில்   இங்கிருந்து எப்படி தப்புவது?.  வெளியே  செல்ல  ஏதாவது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும்.   பீமன்  பொறுப் பேற்றான்.  நம்பகமான  சிலர்  உதவியை நாடி மாளிகையிலிருந்து வெளியே  ஆற்றங் கரை  வரை  சுரங்க பாதை  அமைத்தாக  வேண்டும்.  ஒரே நாளில்!  துரியோதனனின்  ஒற்றர்களுக்கு  தெரியாமல் இதை செய்ய வேண்டும். வேலையை  ஆரம்பித்தனர்  பாண்டவர்கள்.  சோர்ந்து விட்டனர். பீமன்  மனம்  கண்ணனை  வேண்டியது.  “நீயே  எனக்கு உதவ வேண்டும்” என்று     வேண்டி சுரங்கம்  தோண்ட ஆரம்பித்தான்  பீமன்.  அன்ன  ஆகாரமின்றி  செயல் பட்டான். குந்திஇந்தா,  எதாவது  கொஞ்சம்  ஆகாரம்  சாப்பிடு”  என்று  வற்புறுத்தியும்  "எனக்கு  நேரமில்லை. விரைவில்  இது முடிந்தாக வேண்டும்”  என்று  சுரங்க பாதை  அமைப்பதில்   துடியாக இருந்தான்  பீமன்.

"கிருஷ்ணா  நீ  ஏன் ஏதோ யோசனையில் இருக்கிறாய்?. இலையில்  வைத்த  உணவு  தொடப்பட வில்லையே"  என்றாள் ருக்மணி  த்வாரகையில்.   
"என்  நண்பன்  பீமன்  என்னை நினைத்து  ஆகாரமின்றி  செயல் படுகிறான்.  அவன்  வெற்றிகரமாக வேலையை  முடிக்கும் வரை எனக்கும்  ஆகாரம் இல்லைஎன்றான்  கண்ணன்.

மறுநாள்  குறிப்பிட்டபடி அந்த புதிய அரக்கு மாளிகை  தீப்பற்றி  எரிந்து  சாம்பலாகியது.  அதற்குள் ஆறு உருத் தெரியாத கருகிய  உடல்கள்  கண்டு  துரியோதனன்  மகிழ்ந்தான். ஆற்றின்  மறு கரையில்  பாண்டவர்களும்  குந்தியும்  ஏதோ  ஒரு  கிராமத்தில் கிருஷ்ணனை நன்றியுடன்  நினைத்து கொண்டு உணவை தொட்டனர்.

"பீமா,  உன் பலத்தாலும்  அசுர  வேகத்தாலும்   தான்   ஒரே  நாளில்  இரவில்  நாம்  அனைவரும்  உயிர் தப்பினோம்.  இதை  எப்படி  சொல்வது"  என்றாள் குந்தி.  
"தாயே, அந்த  சக்தி  என்னுடையது  இல்லை,  கிருஷ்ணனிடம்  இருந்து வந்ததால்  அவனுக்கே  நமது நன்றி உரித்தாகும்" என்றான்  பீமன்  

No comments:

Post a Comment