Monday, December 3, 2012

MORAL STORY மனித தெய்வம்


                                      மனித தெய்வம்

 இன்றைய  குட்டி கதை கற்பனையல்ல  நிஜம்  இது குட்டி "காதை" ( காவியங்கள் காதை எனப்படும்) 
இறைவன் மனிதனாக  உருவெடுத்தல்   அவதாரம் மனிதன் இறைவனாக வாழ்ந்தால் அவன் தெய்வம். இந்த காதை   ஒரு  மனித தெய்வம்  பற்றியது 
திம்மக்கா  14 வயதில்   சிக்கன்னாவின் மனைவியானாள் . பத்து வருஷமாகியும்  குழந்தை  இல்லை.  ஊர் மலடு  என்றது திம்மக்கா  நிறைய மனதில் காயப்பட்டு யோசித்தாள். யோசித்த திம்மக்கா, மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது  என்று  முடிவெடுத்தாள் பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா?  உயிரும் ,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா? பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள் சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே  ஒரு  4 கிலோமீட்டர் சாலை நெடுக இரு புறங்களிலும் 284  பிள்ளைகளைஆலமரங்களை நட்டாள். தினமும் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டாள்
 இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரச் செடிகள் இலைகளும், தழைகளும் உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவத் தொடங்கினார். நட்ட 284 ஆலமரங்களும் அழகு மிளிர, சாலையின் இருபக்கங்களிலும் இருந்து மென்காற்றை வீசின. மரங்களில் உள்ள  பறவைகள்தங்கள் மொழியால் கீதம் பாடி குதூகலிக்கின்றன. மரங்களுக்கு  நீர வேண்டுமே?     ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு  ஊற்றினாள்.
ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர கொண்டு , மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்து விட்டார். கை,கால்களில் ரத்தம் வழிய, ஒ…வென்று அழுகை. பதறி ஓடி வந்த சிக்கண்ணா,‘என்னம்மா ரொம்ப வலிக்குதா?’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க! கொண்டு வந்த தண்ணீர் கொட்டிப் போச்சு… அதான் அழறேன்’ .திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின்  மூத்த பிள்ளைக்கு(ஆலமரத்துக்கு) இப்போது வயது 52 .
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய்கள். கர்நாடக அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியுள்ளது., என் பிள்ளைகள் தான் (மரங்கள்) என் உலகம். இவைகளை விட்டு நான் எங்கேயும் வரலை’ என்று பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட 
திம்மக்கா ஹுளிகல்லிலேயே 500 ரூபாய் ஓய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன்’ வாழ்ந்து வருகிறார்.  வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம். 100 வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா   இனி  தண்ணீர் சுமந்துவர
 முடியாதே!!, புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை. ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார்.
இவர் பெற்ற விருதுகளில் சில..,
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாண்ட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு, இப்போது ‘திம்மக்கா சுற்றுச்சூழல் 
கல்வி வளங்கள்’ என்று அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
தேசிய குடியுரிமை விருது  1995, இந்திரா பிரியதர்ஷணி வ்ரிக்க்ஷமித்ரா விருது – 1997, சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை, இவருடைய விருதுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. திம்மக்கா  எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும் அவருடைய செயலுக்கு ஈடுஇணை உண்டா ?



No comments:

Post a Comment