Monday, December 3, 2012

MORAL STORY 22 வித்து






  KUTTI KADHAI 22                                    வித்து 

"யுதிஷ்டிரா,  உன்னுடையநாட்டில்  மக்கள்   எல்லோரும்  மிக்க  மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்  
என்று  கேள்விப்பட்டேன்.   ரொம்ப  சந்தோஷமாக இருந்தது.!"
"மக்களை  ரட்சிப்பது  மன்னனின்  கடமை அல்லவா  கண்ணா?"  என்றான்  தர்மன் .  
"இந்த்ரப்ரஸ்தத்தில்  வந்து  நிறைய  பேர்  குடியேருகிரார்களாமே.  அண்டை  நாடுகளில்  
ராஜாக்களுக்கு இது பொறாமையாமே.   கதவுகளே இல்லாத வீடுகளாம்.  திருடர் பயம்  இல்லையாம்  இரவிலும்  கூட  பெண்கள்  தனித்து  நடமாடலாமாம். யார் வீட்டிலும்  தனி  சமையல் இல்லையாம்.  உன்  அரசாட்சியில்  ஒவ்வொருநாளும்  மக்கள்   குதூகலமாக உள்ளனராம்!!   ஊரெங்கும்   இதே பேச்சு. !" .
"கிருஷ்ணா,    உனக்கு தெரியாததா.  நான்  உன்னை பின்பற்றுபவன். உன்  துவாரகையில்  கொஞ்சமாவது என்  இந்த்ரப்ரஸ்தம்  இருக்கவேண்டும்  என்று  எனக்கு
ஆசை""
"அது  சரி  நீ  ஏன்   ஒரு பெரிய  மாளிகை  கட்டிகொள்ளவில்லை?".
"எங்கள்  ஐவருக்கும்  போதுமான  இடம் இந்த  சிறிய அரண்மனையில்   இருக்கிறதே கண்ணா!".
"நீ  ஒரு  மகாராஜா.  உன்  சகோதரன்  துர்யோதனனை பார்    ஹஸ்தினாபுரம் மாளிகை  எவ்வளவு  பெரியதாக கட்டியிருக்கிறான்!" 
"கிருஷ்ணா  எனக்கு  அதில் எல்லாம்  விருப்பமில்லையே.!" 
"அரசனுக்கு  என்று  ஒரு அந்தஸ்து இருக்கிறதே.  அதை கடைபிடிக்கவேன்டாமா? பிடிக்கிறதோ  பிடிக்கவில்லையோ   சில நிர்பந்தங்களுக்கு  நீ  உன்னை   கட்டுப்படுத்திக்கொண்டு ஆகவேண்டும்!".
"இதால் என்ன  பிரயோஜனம்  கண்ணா?".
" பலன் எதிர்பார்க்காதே  தர்மாவெயிலும்  மழையும் இரவும்  பகலும், இயற்கைவிதி.  அதுபோல்  மனிதன்  வாழ்க்கையிலும் இன்பம் துன்பம்  இரண்டும் கலந்தே வரும்.  நீ அனைத்தையும்  சமமாகவே  ஏற்றுக்கொள். உனக்கு  பிடித்த சிலவற்றை செய்வாய்  அதால் பிறர்க்கு துன்பம் வரும். உனக்கு கூடாது  என்று  ஒரு கொள்கை வைத்துகொள்வாய்.  அதால் மற்றவர்க்கு  பேராபத்தும் நேரலாம். எது எப்போது அமையவேண்டுமோ  அது   அவ்வாறே நிகழட்டுமே!"    .
"கண்ணா  எல்லாம்  நீ   சொல்படியே . நீ காட்டிய  வழியில்  செல்பவன் நான்.   நானும்  பாண்டவர்க்கு  என்று  ஒரு  மாளிகை  கட்டிகொள்கிறேன்.  அர்ஜுனனுக்கும்  
இப்படி ஒரு எண்ணம்   வெகுநாளாக உண்டு"  என்றான்  தர்மன்.
"கவலை வேண்டாம்   நானே  மயனிடம்   பேசி ஏற்பாடு பண்ணுகிறேன் " என்றான்  கிருஷ்ணன் 
மயன்  இதுவரை எவரும்  காணா அளவுக்கு இந்த்ரப்ரஸ்தத்தில்  ஒரு மாளிகை எழுப்பினான்.  அண்டை அயல்  ராஜாக்கள்  அனைவரும்  வரவேற்கப்பட்டு  துரியோதனனும்   குடும்பத்தோடு வந்தான்.  அன்றிலிருந்து அவன் தூங்கவே இல்லை.   
பிறகு  நடந்தது தான் தெரியுமே.  சகுனி  மாமா திட்டம் தீட்டி  தர்மனை சூதாட்டம் ஆடவைத்து  இந்த அரண்மனை மாளிகை, ராஜ்ஜியம், சகோதரர்கள், மனைவி  எல்லாம்  இழந்தது வனவாசம்   தலைமறைவாக ஒருவருடம்,  பின்னர்  போரில் வென்றது
கிருஷ்ணன் இதையெல்லாம் உணர்ந்து தான்  தர்மனை  மாளிகை கட்ட சொன்னானோ.  பாரத போருக்கு  மாளிகை தான்  வித்தோ?
காரணம்   இன்றி காரியமேது !!!"  

No comments:

Post a Comment