Saturday, April 30, 2011

why fear when i am here??????

"யாமிருக்க பயமேன் ?
ஒரு இனிய மாலை பொழுது. அந்த கிருத்துவ ஆலயத்தின் முன் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆயிற்று சற்று நேரத்தில் பாதிரியார் வருவார் அன்றைய பைபிள் சொற்பொழிவு ஆரம்பமாகுமே! திடீரெண்டு ஒரு சுழல் காற்று வீசியது. கரிய பெரிய உடலுடன் சாத்தான் அங்கு வந்து குதித்தான். அடுத்த கணமே எல்லோரும் துண்டை காணும் துணியை காணும் என்று பறந்து சென்று விட்டனர். ஒரே ஒரு முதியவர் மட்டும் தனியே அமர்ந்திருந்ததை கண்ட சாத்தான் அவரிடம் வந்து பேசினான்:
"எல்லோரும் என்னை கண்டதும் பயந்து ஓடி ஒளிந்தபோது நீ மட்டும் இருக்கிறாயே -- நான் யார் தெரியுமா ?
" ஆஹா !! தெரியுமே."'

'என்னை பார்த்து பயமில்லையா? சாத்தான் கேட்டான்.
" பயம் ஒண்ணும் இல்லை"
'ஏ முட்டாளே ! ஒரே வார்த்தையில் உன்னை சித்ரவதை செய்ய என்னால் முடியும்""

' ஆமாம் அது நிச்சயம் - கிழவர் முனகினார்"
" உனக்கு எல்லாவிதமான துன்பத்தையும் கவலையும் என்னால் உண்டாக்க முடியும் தெரியுமா? சாத்தான் மார் தட்டினான் .
" ம்ம்ம். - கிழவன் ஆமோதித்து தலையாட்டினான். "

' இதெல்லாம் தெரிந்தும் உனக்கு பயம் இல்லை என்கிறாயா? - சாத்தான் குரல் ஓங்கியது. .

' எதற்கு பயம் ?"
" சாத்தான் அசந்து போய் கேட்டான் " ஏன் உனக்கு என்னிடம் பயமே இல்லை?"
" உன் அக்கா தான் 40 வருஷமாக என் மனைவியாக இருக்கிறாளே " -- கிழவரின் வாய் முணு முணுத்தது"

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...