Wednesday, May 25, 2022

SUNDARAMURTHY NAYANAR



 #தம்பிரான்_தோழர் -  நங்கநல்லூர்  J K  SIVAN

 சுந்தரமூர்த்தி நாயனார்.

''இரு கைலாச வாசிகள்''

ஒருவர்  கைலாச பதவி அடைந்தார், வைகுண்ட பிராப்தி கிடைத்தது  என்று சொல்கிறோமே  அதெல்லாம் அந்த 
மனிதர்கள் பூலோகத்தில் உடலை நீத்து, உயிர் பிரிந்த பிறகு தான்.   மொத்தமாக  சிலர்  படகிலோ, விமானத்தி
லோ,  வெள்ளத்திலோ,  ரயிலிலோ  விபத்தில் மரண
மடைந்தால்  நாம் அப்போது சொல்வது அவர்கள்   ''கூண்டோடு கைலாசம்'' சென்றார்கள் என்று. 

உயிரோடு ஒருவர்  கைலாசம் செல்வது ஆச்சர்யமானது. அதுவும் நண்பரோடு சேர்ந்து ஏதோ பீச்சுக்கு போவது போல் கைலாசத்துக்கு போவது என்பது உலகிலேயே தமிழில்  சைவ புராணங்களில் தான் காண்கிறோம்.   ஆம்.  சுந்தரமூர்த்தி நாயனார்,  அவிநாசியில்   அவிநாசி
லிங்கத்தின்  உதவி கேட்டு  முதலை வாயில் இருந்து ஒரு பிள்ளையை மீட்டு அவன் குடும்பத்தில் சந்தோஷத்தை  அளித்துவிட்டு  நன்றியோடு  அவிநாசிலிங்கத்தின் மேல் பதிகம் பாடிவிட்டு  அவனைப் பிரிய மனமில்லாமல்  அந்த க்ஷேத்ரத்திலிருந்து  விடைபெறுகிறார். 

சுந்தரின் நண்பர், இன்னொரு சிவ பக்தரான , சேரமான் பெருமாள் நாயனார்    ' எங்கே  சுந்தரர் சென்று வெகு நாட் களாகி விட்டதே  என்று  ஆர்வத்தோடு  ஆள் மேல் ஆள்  விட்டு  சுந்தரரை   அழைத்துக் கொண்டே இருந்தார்.  சுந்தரர் அதனால்  நேராக  கொடுங்களூர் சென்றார்.  சேரமானுக்கு   சுந்தரர் வந்ததில்  பரம சந்தோஷம். அதோடு  விஷயங்கள் கேள்விப்பட்டதில்  அதி  ஆச்சர்யம்.

'' எப்படி சுந்தரர் சொல்வதையெல்லாம்  சர்வேஸ்வரன்  சிவபெருமான்  கேட்கிறான்?.  இறந்து போன  ஒரு  பையனை   முதலையின் வயிற்றிலிருந்து  சுந்தரர்  சிவன் மேல் ஒரு பதிகம் பாடி  மீட்டாராமே. இது எப்படி சாத்தியம்? ஆச்சர்யமாக அல்லவோ இருக்கிறது? சுந்தரர்  என் நண்பர் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்'' என்கிறார்  சேரமான் .

அவிநாசியிலிருந்து  புறப்பட்ட அந்த அதிசயச் செய்தி அகில உலகமும்  பரவி விட்டதே. சுந்தரர் மீது உண்டான நட்பு இன்னும் அதிகமாகி சேரமானை  அவரோடு இணைத்தது. ஈருடல் ஓர் உயிர் சிவபக்தர்கள் ஆகிவிட்டனர் இருவரும்.

 சுந்தரர் சில காலம்  சேரமானோடு கொடுங்களூரில்  தங்கினார்.   சேரமான் அரண்மனை இருந்த  இடத்திலிருந்து  ரெண்டு மூணு கி.மீ தூரத்தில்  திருவஞ்சிக்குளம் எனும்  அமைதியான மலையாள ஊரில் ஒரு  அழகிய  மஹாதேவன் ஆலயம். அங்கே  சுந்தரர் வழக்கமாக சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

என்றும் போல்  அன்றும் ஒருநாள் திருவஞ்சிக்குள   ஆலயத்தில் மகா தேவனை தரிசித்தார். மனம் கட்டவிழ்ந்து  பாடியது.  ஏனோ அன்று  மனம் ரொம்ப  இறுகியது போல் உணர்ந்தார்.  உடல் ஏன் பாரமாகி விட்டது?    இறைவன் மீதுள்ள அன்பும்  பாசமும்  நெகிழ்ச்சி தந்தது. அவருக்கு சிவனோடு இணைய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி யது.  ஆலயத்தில் அன்பு  மேலீட்டால்  தரையில் புரண்டார்.  ஆனந்தக்  கண்ணீர்  வடித்தார். இறைவனை விட்டு வெளிவர மனமே இல்லை. நேரம் ஓடியது.  உடல் சிலிர்த்தது. மயிர்க்கூச்செரிந்தது. தன்னை மறந்த நிலையில்  மயங்கினார்.  எவ்வளவு நேரம் சிலையாக அமர்ந் தாரோ.   நினைவு திரும்பியது.  உலகம் தெரிந்தது.    மனம் வெடித்து வார்த்தைகள் சிதறியது.  

''போதும் போதும் பரமசிவா இந்த பூலோக வாழ்க்கை எனக்கு.   ரொம்பவே  அதிகம் இது.   பதினெட்டு வருஷங்கள் இங்கே வாழ்ந்து அலுத்து விட்டேன். மீண்டும் உன்னோடு கைலாசத்தில் இருக்க மனம் வாடுகிறதே. என்று பதிகம் பாடுகிறார். பதினெட்டே வருஷங்கள் வாழ்ந்தாலும் பதினேழு யுகங்களிலும் மறக்கமுடியாத சிவனோடு  இணைந்த ஒரு பக்தரை,  தோழனை பார்க்க முடியாது. 

‘’வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
    விளங்குங்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
    தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
    கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே’’.

 பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
    பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
    சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
வடிக்கின்றன போற்சில வன்றிரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே’’.  

  பரமேஸ்வரனுக்கும்  சுந்தரனை அருகில் அழைக்க விருப்பம் தோன்றியது.  

வெள்ளை யானை ஒன்று விண்ணிலிருந்து  சுந்தரரை  ஏற்றிச் செல்ல சேரமான் தேசத்தில்  திருவஞ்சிக்குளம்  வந்தது.  சுந்தரர்  அங்கே  மனத்தாலும் நாவில்  சிவமணம்  ததும்பும்  தேவார  பதிகத்தாலும்  நமசிவாயனொடு   இரண்டறக் கலந்து  லயித்து இருந்த நேரம் அது. தேவர்கள் சகிதம் ஐராவதம் வந்து இறங்கியது. சுந்தரருக்கு தேவ லோகத்திலிருந்து  ராஜமரியாதையோடு  கைலாச வாசத்துக்கு அழைப்பு.  

''சுந்தரா,  என்னிடம் வா'' என்று  சிவபிரானும் செய்தி அனுப்பினார்.  சுந்தரருக்கு  ஆனந்தம்  தாங்கவில்லை.  

''ஆஹா,  என் நண்பன் சேராமானும் என்னோடு வரலாமே'' என்று மனம் விரும்பியது.  இதோ நான் புறப்பட வேண்டும்.  சிவன் காத்திருக்கிறான் எனக்காக. என் நண்பனை எங்கே இப்போது தேடுவது.?   அவன்  அரசன்.  ராஜரீக பொறுப்பில்  கொடுங்களூரில் அல்லவா  இருக்கி றான்.''

''நான் இந்த தேஹத்துடனேயா சிவனை நோக்கி கைலாசம் போகிறேன்?. அல்லவே அல்ல. இது அங்கே வராது.  என்  சூக்ஷ்ம சரீரம் ஆத்மா அல்லவோ அங்கே செல்கிறது?   எங்கிருந்து வந்ததோ அந்த ஐம்பூதங்களை இந்த தேகம் சேரவேண்டாமா?  என்று சுந்தரர்  நினைத்திருப்பாரோ?

சேரமான் விஷயம் கேள்விப் படுகிறான்.

 ''ஆஹா,   என் தோழர் சுந்தரர் என்னை விட்டு  கைலாசம் சென்று விட்டாரா?. என்னை விட்டு தனியே சென்றுவிட்டாரே. இனி எனக்கும் இங்கே வேலை எதுவும் இல்லையே.   எங்கே  என் குதிரை?''

பரிமேல் பறக்கிறார்  சேரமான் பெருமாள் திருவஞ்சிக்குளம் நோக்கி.   சரியான நேரம் சேரன் வந்து சேர்ந்தது.   சேரமான் பெருமாள் வந்து   சேர்வதற்கும்  ஐராவதம் புறப்படுவதும் ஒன்றாக நேர்ந்தது.  சேரமான் தனது குதிரையின் காதில்  ''ஓம் நமசிவாய''  எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிறார்.  என்ன ஆச்சர்யம்!  குதிரை விண்ணில் பறந்தது ஐராவதம் அருகில் நெருங்கியது.  சுந்தரர்  நண்பனைப்  பார்க்கிறார்.  ''நினைத்தேன் வந்தாய்,   நண்பா'' .சேரமான்  சுந்தரரை தரிசிக்கிறான். இரு சிறந்த சிவனடியார்களும் கைலாசம் சேர்ந்து போகிறார்கள். ஆம்  இருவருமே  சூக்ஷ்ம சரீரத்தோடு கைலாசம் அடைகிறார்கள்.  
 
கைலாச வாசலில்  சுந்தரர் நுழைகிறார்.  சேரமான் உள்ளே செல்ல இயலவில்லையே.

''மகாதேவா, உன்னை நான் வந்தடைந்தேன். கைலாச  வாசா,   என் ஆருயிர் நண்பன் உன்னை மறவாத நெஞ்சத்தான் சேரமான் வாயிலில் நிற்கிறான். அவனையும் அல்லவா இங்கு அழைத்து அருளவேண்டும்.'' என பாடுகிறார் சுந்தரர்.  

''ஆஹா, சுந்தரா, உன் ஆசை நிறைவேறட்டும்.  நந்திகேஸ்வரா, நீ சென்று சேரமானை எம்மிடம் அழைத்துவா''

''சேரமான் பெருமாள்,   நீ   என் அழைப்பு இல்லாமல் இங்கே  எவ்விதம் வர இயலும்?''  என்கிறார் பரமேஸ்வரன்.

''ஈஸா,  சுந்தரர் செல்வதைக்  கண்டேன். சுந்தரர் இன்றி என்னால்  பூமியில் வாழ முடியாதே  என் செய்வேன்?. அவரை அதனால் தொடர்ந்தேன். சுந்தரரால்  எனக்கு  கைலாசநாதரே, தங்கள் தேவ தர்சனம் கிடைத்ததே சுவாமி.நான் பாக்கியவான்''  என நா தழு தழுக்கிறார் சேரமான்.  

ஒரு  சிறந்த சிவனடியாரை பணிந்து தொழுவதால்  கைலாஸ பதவியும் தேடாமல் கிடைக்கும் என்பது சுந்தரர் சரித்திரம்  விளக்குகிறது அல்லவா?  இனியாவது நாம்  ‘’ஓம் நமசிவாய ‘’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சிறிதாவது உச்சரிப்போமா?. மனதில் சிவனை நிறுத்திக் கொள்வோமா.? பேரின்பம் பெறுவோமா?  தினமும்  ஒரு முறையாவது ஓம் நமசிவாய என்று சொல்வோமா?

சுந்தரர் எனும்  ஹாலஹால  சுந்தரர் மீண்டும்   கைலாசத்தில் பரமேஸ்வரனுக்கு நந்தவன மலர்மாலை கைங்கர்யம் தொடர்கிறார்.   சிறிது காலத்தில் சங்கிலியும்  பரவையும்  பூலோக வாழ்க்கை முடித்து கைலாசத்தில் உமா தேவிக்கு  உதவியாக பழையபடி பணி புரிகிறார்கள்.  நாமும்    தம்பிரான் தோழர் என்ற  சுந்தரர் சரித்ரத்தை இத்துடன் முடித்தோம்.

Monday, May 23, 2022

RAMANA MAHARSHI

#ரமண_ மஹரிஷி -  நங்கநல்லூர்   J K  SIVAN 

சூரி நாகம்மாவின் லெட்டர். 



ஸ்கந்தாஸ்ரம விஜயம் 


 இதற்கு தேதியா  முக்கியம்?  1945ல் ஒரு நாள் எழுதப்பட்ட   ஒரு ருசிகர தெலுங்கு லெட்டரின் சாராம்சம்:

இன்றைக்கு ஆஸ்ரமத்தில் ஒரு   பேச்சு அடிபட்டது.  நாளைக்கு காலை பகவான் ரமணர் ஸ்கந்தாஸ்ரமம் செல்வதற்காக கரடுமுரடு பாறைகளை தாவி மலை ஏறுவார். நல்ல நாள். பக்தர்களும் கூட செல்வார்கள். எல்லோருக்கும் அங்கே தான் போஜனம். அவரவர் எங்கோ தொலை தூரம் செல்வதுபோல் மூட்டை முடிச்சு எல்லாம் தயார் பண்ணிக்   கொண்டிருந் தார்கள். பகவான் எதையும் நினைவில் கொண்டவராக தோன்றவில்லை. வழக்கம்போல் அமைதியாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்



''சுவாமி வாருங்கள் ஸ்கந்தாஸ்ரமம் செல்லலாம்''    என்றால் அப்படியே எழுந்து கிளம்பிவிடுவார். எங்கும் போக  வேண்டாம் என்றால் அப்படியே அமர்ந்துவிடுவார். அவருக்கு எதற்கு முன் ஏற்பாடு? கையில் ஒரு கமண்டலம். கைத்தடி, அரையில் கோவணம். மேலே ஒரு துண்டு. இது தான் அவர் ஆஸ்தி. சொத்து எல்லாமே.



பொழுது விடிந்தது.   காலையில் வழக்கம்போல வேத பாராயணங்கள்  முடிந்தது. பகவான் ஸ்னானம் பண்ணியாகி விட்டது. காலை உணவும் அருந்தினார். மலை ஏற கிளம்பிவிட்டார். சிவபெருமானுக்கு நந்தி போல் உறுதுணையாக கூட இருந்து பகவான் ரமணருக்கு உதவுவது எப்போதும் ரங்கசாமி தான்.  பூர்வ  ஜென்ம புண்யசாலி.  மலையில் சௌகரி யமாக பகவான் ஏற குறுக்கு வழியில் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு  போகும்  பாதையை  அவனுக்கு நன்றாக  தெரியும். ஏதோ ஆர்வமாக தனது வீட்டுக்கு ஒருவர் போவது போல் பகவான் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு கிளம்பினார். பக்தர்கள் பலர் முன்னரே நடந்து வழியை சரி பார்த்துக்கொண்டு  சென்றார்கள்.



என்னோடு பகவானின் சதோதரி அலமேலு  நடந்தாள்.  மீதி பேர் சிலரும்   எங்களோடு  பகவான் பின்னால் நடந்தோம்.  ஸ்கந்தாஸ்ரமம்   கூரைக் கட்டிடம் .  அதன்  எதிரே மரங்களின் நிழலில் பகவான் அமர்ந்தார். ஸ்கந்தாஸ்ரமம் அப்போது எப்படி இருந்தது என்றால் நைமிசாரண்ய ரிஷிகள் சொல்வார்களே அதுபோல்,  அதேமாதிரி   பத்ரிகாஸ்ரமம் புராணங்களில் எப்படி இருந்தது என்பார்களோ அப்படியே  தான்  எனக்கு  காட்சி  அளித்தது.  சுற்றிலும் வனம் .   எண்ணற்ற பறவைகள், எங்கோ மலை  மீதிருந்து சிலுசிலு வென்று ஒரு அருவி ஓடும் சப்தம்.. விலங்குகள் பல வித குரல்களில் கத்தியது.   ரொம்ப ரம்யமான சூழ்நிலை. ரிஷி  குமாரர்கள் சாமவேதம் பாராயணம் பண்ணுவது போல் பக்ஷிகள் குரல் செவிக்கு இனிமையாக இருந்தது. பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் இன்று இருப்பார் என்று தெரிந்த  எண்ணற்ற பக்தர்கள்  அங்கே  முன்னதாக வந்திருந்து  குழுமி இருந்தார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வண்டிகளில் வந்து மலை ஏறி டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், புலவர்கள், கலை நிபுணர்கள், பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாக, ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி  எல்லோரும்  ஒரே குடும்பத்தினராக   காணப்பட்டனர். பகவானை சுற்றி எல்லோரும் தரையில் அமர்ந்தார்கள். அவர் மீதே  அனைவரின்  பார்வையும்  கவனமும் இருந்தது.  


 மேலே மர நிழல்களுக்கும் அப்பால் மேகங்கள் குடை பிடித் தது போல் இருந்தது. தென்றல் காற்று வெண்சாமரம் வீசியது.


பக்தர்கள் சிலர்   அங்கிருந்த அனைவருக்கும்  தாங்கள் கொண்டு வந்திருந்த  சிற்றுண்டிஇனிப்புகள் எல்லாம் வழங்கி னார்கள். நிறைய பூரி கூட்டு  காலை  ஆகாரமாக உள்ளே சென்றது


மாலையில்  அந்தி  வேளையில்  பகவான் திரும்ப  கீழே  ஆஸ்ரமம் நோக்கி   நடந்தார். அனைவரும் பின்னால் தொடர்ந்தார்கள். சந்தியா கால வேத பாராயணங்கள் ஆஸ்ரமத்தில் ஆரம்பித்தன. பகவான் அமைதியாக அசையாமல் உட்கார்ந்தி ருந்தார்.  மகரிஷிக்கு  எப்போதும்   எங்கோ சிந்தனை.  கண்கள்  எங்கோ தூரத்தில் எதையோ நோக்கியவாறு இருக்கும்.  முகத்தில் அரும்பு புன்னகை. யார் யாரோ போட்டோக்கள் எடுத்தார்கள். சிலர் கேட்ட கேள்விகளுக்கு   பதில் சொன்னார். பதில் கூடுமானவரையில்  ஓரிரு வார்த்தைகளில் தான் இருக்கும்.. 



கீழே  ரமணாஸ்ரமத்தில்   மகரிஷி உட்கார்ந்திருந்தது எனக்கு  யாரோ ஒரு பெரிய மஹாராஜா தர்பாரில் இருப்பது போல் தோன்றியது.  . காற்று பலமாக வீசவே, ஒரு சில பக்தர்கள் ஒரு துப்பட்டாவை முகம் மட்டும் தெரியும்படியாக அவர் மேல் போர்த்தினார்கள். ''


மௌன வியாக்கியானம் '' மெளனமாக  உபதேசம்  தொடர்ந்தது. எண்ணற்றவர் மனதில் எழுந்த வி


னாக்கள் தானாகவே மனதில் 
விடை பெற்றன. சாப்பாடு நேரம். எல்லோருக்கும் புளியோதரை தயிர் சாதம் வழங்கப்பட்டது. எல்லோர் மத்தியிலும் தரையில் அமர்ந்து பகவானும் உண்டார். 



வழக்கமாக  அவர்  உட்காரும் சோபாவை   வெராண்டாவில் கொண்டு வைத்தார்கள். வெராண்டாவில் க்ராதிக் கம்பிகள் போட்டு மடக்கி வைத்திருந்ததால்  அருகே யாரும் போகமுடியாது. எல்லோரும் நகர்ந்து நகர்ந்து அருகே வந்து அமர்ந்தார்கள். பக்கத்தில் ஒரு சிறு அறை . அதில் நானும் அலமேலுவும் . அதன் ஜன்னல் வழியாக பகவான் தெரிவார். பகவான் குட்டி குட்டிக்  கதைகள் சொல்வார். சில சமயம் அருணாச்சல மலையில் தனது அனுபவங்களை ஞாபகப்படுத்தி சொல்வார். நிறைய சிறுத்தைகள், குரங்குகள் சர்ப்பங்கள்   மயில் கூட்டங்கள் அணில் குடும்பங்கள், கீரிப்பிள்ளை, தன்னோடு நெருங்கி பழகியதை எல்லாம்  சொல்வார். அவரது அம்மா  ஆஸ்ரமத்துக்கு  வந்ததைப் பற்றி சொல்வார். ஸ்கந்தாஸ்ரமம் கட்டுமானம் வேலைகள் நடந்துகொண்டிருந்தது . அவ்வப்போது அதைப்  பற்றி செய்தி வரும். 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...