THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Monday, May 31, 2021
LIFE LESSON
GEETHANJALI
63. Thou hast made me known to friends whom I knew not.
Thou hast given me seats in homes not my own.
Thou hast brought the distant near and made a brother of the stranger.
I am uneasy at heart when I have to leave my accustomed shelter;
Through birth and death, in this world or in others,
wherever thou leadest me it is thou, the same,
the one companion of my endless life who ever linkest my heart
with bonds of joy to the unfamiliar.
When one knows thee, then alien there is none, then no door is shut.
Oh, grant me my prayer that I may never lose the bliss of the touch of the one in the play of many.
கிருஷ்ணா, உன் மஹிமையை, பெருமையை எப்படிடா சொல்வேன்?
வழக்கமான என் இடத்தை விட்டு நான் விலகுவது கஷ்டம் தான். பழையன கழிவதும் புதியன புகுவதும் காலம் செய்யும் லீலை. ஆனால் பழையது தான் புதியதாக, நீதான் எல்லாமுமாக இருக்கிறாய் என்று நன்றாக அறிவேன். எத்தனையோ பழைய தெரிந்த முகங்கள் அறிந்த பெயர்கள் மறைந்துவிட்டன, ஒவ்வொரு நாளும் இழந்து கொண்டே வருகிறேன். இது உலக நீதி, நியதி, இதற்கு கொரோனாவும் பெரிதளவு உதவுகிறது என்பதும் உண்மை என்று அறிந்து என் மனம் வாடுகிறது. ஜனனம் சந்தோஷத்தையும் மரணம் சோகத்தையும் தருவது இயல்பு.
கிருஷ்ணா, நீ எப்படி எல்லாம் என்னை அழைத்து, எங்கெல்லாம் என்னை இழுத்துச் செல்கிறாயோ அப்படியெல்லாம் நான் அசைபவன். எனது நீண்ட வாழ்க்கைப் பாதையில் என்றும் நீயே இணை பிரியா ஒரே உறவினன், உற்ற துணைவன் நீ மட்டுமே. எவ்வளவு புது முகங்களை இனிக்க இனிக்க எனக்கு உருவாக்கி இருக்கிறாய். ஆமாம், கிருஷ்ணா, உன்னைத் தெரிந்து கொண்டால் எல்லோரையும் தெரிந்து கொண்டதாக அல்லவா அர்த்தம். நீ தானேடா எல்லாமே, எல்லோருமே, எல்லா கதவுகளும் உன்னை வரவேற்கும் திறந்த கதவுகளாயிற்றே.
பகவானே கிருஷ்ணா, என்னை ரக்ஷி. நான் உன்னை விடாமல் போற்றி வணங்குபவன் உன் நாமம் சொன்னாலே போதுமே, எல்லாவற்றையும், எல்லோரையும் கட்டி அணைக்கும் ஸ்பரிசம் அல்லவா அது. விடுவேனா?
PESUM DEIVAM
பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
22 மன்னார்குடி பெரியவா
தினமும் வடக்கே நடந்து கைலாசநாதர் கோவில் அருகே தான் காவேரி ஸ்நானம். சிஷ்யர்கள் தெற்கே மீனாட்சி அம்மன் ஆலய படித்துறையில் ஸ்னானம் செய்வார்கள். ஒரு சிஷ்யன் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் ஒரு தடவை தர்க்கத்தில் விடை சொன்னதை அவமரியாதை, கர்வம் என்று எடுத்துக்கொண்டு தண்டிக்க குருகுலத்தை விட்டு அனுப்பினார். கிருஷ்ண சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் நடத்தினார். (இந்த பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் பின்னர் மஹா பெரியவாவின் ஒரு குரு மகேந்திர மங்கலத்தில்)
இதர சிஷ்யர்கள் மூலம் க்ரிஷ்ணசாஸ்திரியின் பிரசங்கங்கள் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டு தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்ட மன்னார்குடி பெரியவா மகிழ்ந்தார். ராமனின் கல்யாண குணங்களை பற்றி பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் கடல் மடை திறந்தாற்போல் பேசிக்கொண்டிருந்தார். அன்று ''ராமனின் பொறுமை'' பற்றி பிரசங்கம். ''என் கண்ணை திறந்துவிட்டது கிருஷ்ணன் பேச்சு '' என்று அதிசயித்தார் மன்னார்குடி பெரியவா. பிரசங்கம் முடிந்து க்ரிஷ்ணசாஸ்திரிகள் தனது குரு வந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து பவ்யமாக கைகட்டி நின்றார்.
''அப்பா கிருஷ்ணா, இன்னிக்கு என் கண்ணை திறந்துட்டே. அடடா ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களைப் பத்தி நீ பேசினது அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி . அபாரம். நீ ஒரு மஹாநுபாவன். எத்தனையோ ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தை தரப்போறே. நாளையிலேர்ந்து மறுபடியும் வா. உனக்கு நிறைய இன்னும் சொல்லித்தரணும்''
இந்த நிகழ்ச்சி மன்னார்குடி பெரியவாளை மாற்றி அவரிடம் இருந்த கோபம் மாயமாக மறைந்து விட்டது.
இரக்க குணம், அமைதி, பொறுமை உள்ளவராக்கி விட்டது..
1864ல் அப்பாவுக்கு சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் பிள்ளை நீலகண்ட சாஸ்திரியை தத்து எடுத்துக்கொண்டார். இருவருமாக குருகுலம் நிர்வாகம் செய்தார்கள். . பல சந்யாசிகள் கூட வந்து மாணவர்களாக சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார்கள். அந்த குருகுலம் பிற்காலத் தில் சங்கரமடமாகியது. இதற்குதவியவர் வேறு யாருமில்லை. நமது பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் உருவான மஹான்கள் சிலர் பெயர்களை சொல்கிறேன்:
பைங்காநாடு கணபதி சாஸ்திரி, நடுக்காவேரி ஸ்ரீனிவாச சாஸ்திரி, பழமானேரி சுந்தர சாஸ்திரி, கோஷ்டிபுரம் ஹரிஹர சாஸ்திரி, திருப்பதி வேங்கடசுப்ரமண்ய சாஸ்திரி. மல்லாரி ராமகிருஷ்ண சாஸ்திரி,
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி, காசி ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள், பாலக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள்
ராமக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், மஹாதேவ ஸ்வாமிகள், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், மகாராஷ்டிரா ஸ்வாமிகள், சச்சிதானந்த ஸ்வாமிகள் , தென்னாங்குளம் வைஷ்ணவ, நீலகண்ட சாஸ்திரி, யஞஸ்வாமி சாஸ்திரி, சுத்தமல்லி ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் யதீந்திராள். இவர்களில் யாரையாவது விவரமாக உங்களுக்கு தெரிந்தால் அவர்களை பற்றி விஷயங்கள் எனக்கு அனுப்பினால் எல்லோருக்குமாக எழுதுகிறேன். எல்லோரும் இந்த மகான்களை அறியவேண்டாமா? பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் பற்றி எழுதியாகிவிட்டது.
மன்னார்குடி பெரியவா தனது தாத்தாவிடம் சாமவேதம் கற்றார். அப்பாவிடம் காவ்யம், நாடகம் எல்லாம் கற்றார். பதினைந்து வயதில் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத படிக்க, பேச, கவிகள் இயற்ற திறமை பெற்றார். ஸ்ரீ நாராயண சரஸ்வதியிடம் மேற்படிப்பு. ஸ்வயம்பிரகாச யதி களிடம் வேதாந்தம். மேல காவேரி சின்னண்ணா தீக்ஷிதரிடம் மஹா பாஷ்யம் கும்பகோணம் ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளிடம் மீமாம்சம் பாடம் பெற்றார்.
1887ல் பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் தங்கவிழா. மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ்திரிகள் பேர் தேர்வு ஆனது. டில்லிக்கு கூப்பிட்டார்கள். தனது நித்ய கர்மாநுஷ்டானம், பூஜைகள் தடை படக்கூடாது என்று ''டெல்லி எல்லாம் நான் போகமாட்டேன் எனக்கு பட்டம் வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார். இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வீட்டுக்கே வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக்கொண்டார்.
மஹா பெரியவா கூட்டிய அத்வைத மாநாடுகள், சபைகளில் பிரதம பண்டிதராக பங்கேற்றவர் மன்னார்குடி பெரியவா.
ராஜு சாஸ்திரிகள் 30 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். பல ஆசிரியர்களுக்கு தனது அனுபவங்களை கொடுத்திருக்கிறார். வேத சாஸ்த்ர , ஹிந்து நீதி நெறி விஷயங்களில் வழி காட்டியாக இருந்திருக்கிறார்.
அவர் எழுதிய நூல்களின் பெயர்கள்:
அவருடைய சிஷ்யர்கள் பைங்காநாடு கணபதி சாஸ்திரி, பருத்தியூர் க்ரிஷ்ணசாஸ்திரிகள் ஆகியோர் தங்கள் குருவை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலம் சென்றது. விருத்தியாப்பியம் மன்னார்குடி பெரியவாளையும் விடவில்லை. 1903ல் 88 வயது. உடம்பு
''எனக்கு பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி ப்ரவசனங்களை கேட்கவேண்டும் போல் இருக்கிறதே'' என்றதும் செய்தி கிருஷ்ண சாஸ்திரியை எட்டியது. எவ்வளவு குரு பக்தி ஸ்ரத்தையான சிஷ்யன் பாருங்கள், கிருஷ்ண சாஸ்திரிகள். உடனே புயலாக மன்னார்குடி ஓடினார். சிலமாதங்கள் அங்கேயே தங்கி குருவுக்கு முன்னால் அமர்ந்து பிரத்தியேகமாக அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்கள், சிஷ்யர்களுக்கு மட்டுமாக அவருக்கு பிடித்த ராமாயண ப்ரவசனங்கள் புரிந்தார். மன்னார்குடி பெரியவாளுக்கு பரம சந்தோஷம். ஆசிர்வதித்தார்.
மன்னார்குடி பெரியவா, மார்ச் 4, 1903அன்று 88 வயதில் விதேக முக்தி அடைந்தார். நாடு நகரம் முழுதும் அவரது மறைவுக்கு வருந்தியது.
CHANAKYA NEETHI
லாத இடம், , ஏனென்றால் அவன் பணத்துக்கு பாதுகாப்பு இல்லையென்றால் அவன் செல்வந்தனாக அங்கே இருக்கமுடியாது. நீ இருந்து என்ன பண்ணுவாய்? ராஜா என்கிற தலைவன் இல்லாத இடம், தலைக்கு தலை நாட்டாமையாக உள்ள இடம் ஆபத்தானது. வேதம் கற்ற பிராமணன் இல்லாத ஊரில் நீதி, நியாயம், நேர்மை இருக்கவே இருக்காது. மனச்சாட்சி இல்லாதவன் தான் இருப்பான். அதேமாதிரி வைத்தியன் இல்லாத ஊரில் எந்த நோய் வந்தாலும் அதற்கு மருந்தில்லாமல் பலியாகவேண்டியது தான். ஆறு நதி இல்லாத ஊரிலும் அதே கதி. வறட்சி உன்னை கொன்றுவிடும்.
LIFE LESSON
न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः ।
परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति ॥
pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti ..
Na karmana, not by karma. One can gain moksha only by knowledge. Karma will bring karmaphala, results, but karma is finite and therefore, karmaphala is also finite. The limited person plus the limited result born of limited karma will continue to be limited. A finite number when added to a finite number will still be a finite number. Therefore, na karmana, there is no way of getting moksha through karma.
Can karma-yoga lead to moksha? Yes, you can gain knowledge by karma-yoga, in that it prepares you for knowledge. It is not just another form of yoga. We mistakenly think that we will perform karma-yoga. Nobody can ‘do’ karma-yoga. There is no particular action called karma-yoga. Some people believe that in giving as charity or in doing some seva, they are ‘doing’ karma-yoga. Karma-yoga is only possible when your goal is moksa, and the entire life is one of proper attitude. For instance, your conduct and duties in marriage or parenting are also part of karma-yoga. You can thus convert your activities in life into a means for your own growth; that is karma-yoga.
Na prajaya, not by progeny. Na dhanena, not by wealth. There are predominant desires such as the desire for wealth, fame, and power in this world, and the desire for the heavens, etc. Punya-karma is dharma, dhana is artha, and praja is kama. Dharmartha-kama is not moksha. You have to deliberately choose moksha. Dharma is useful in that it becomes a basis for conducting your life, and then the whole life becomes yoga. The bliss is known as Paramananda.
Tyagenaike amrtatvamanasuh. Only by tyaga, renunciation of karma, can you gain moksha. Not doing karma is not renunciation. Even while performing karma, you should discover that you are actionless. That is akarma. You can gain moksha only by knowing that the atman is akartr and that it is Brahman.
Swami Dhayananda Saraswathi explains this very nicely:
Parena nakam. Kam means happiness, su-kham. Even without the prefix ‘su’, kham means happiness. Akam is na sukham, that is duhkham. Na akam is the absence of duhkha. Akam na vidyate yasmin tad nakam, that in which there is no duhkha is nakam. Nakam is the sukha of heaven, which is mentioned in the Vedas. It is anitya, lasting only for a finite period. Parena nakam means more than the heavenly sukha. It is ananda, limitless. It transcends svarga; it transcends the absence of duhkha and is in the form of ananda, untouched or uninhibited by duhkha. It is paramananda.
Brahman is not hidden because everything is Brahman. The knower is Brahman, the knowledge is Brahman, and the known is Brahman. Every thought is Brahman; nothing is outside Brahman. Therefore, Brahman cannot be hidden by anything. One of the Upanisad says that if a person could cover space with a cloth, he would cover Brahman! This means all that is here is Brahman. Even while you say, “I don’t know Brahman,” it is Brahman that is talking to me. It is as self- contradictory as saying, “I have no tongue,” or “I am dead”. This is denial of Brahman. You cannot deny Brahman because you are Brahman. If everything is Brahman, how is it that you do not appreciate this fact? This is because it is a question of knowing it, and not a question of believing so. This knowledge is not hidden, but veiled due to ignorance and therefore, the buddhi is called guha.
The buddhi is dark with respect to Brahman, the most obvious. If you have not seen an object, it is out of sight and, therefore, out of mind, but Brahman, being oneself, is never out of sight; it never goes out of mind. Therefore, it is our ignorance that conceals its presence.
Yad vibhrajate, that which shines. It is that which shines in the form of ananda, the atman, consciousness. Vividham bhrajate, or višeshena bhrajate. In the form of this entire jagat, that ananda alone is shining all the time on the platform of one’s buddhi as jñatr-jñana-jñeya, the knower, knowledge and the known. Otherwise, how does one recognise any thing? Everything is in the buddhi. All these galaxies ‘out there’ are ‘in here’ within our buddhi. The sannyasins committed to knowledge ‘gain’paramananda
Yatayah vishanti. Yatayah is the plural form of yatih. A yati is yatna-silah, one who puts in the right effort. This can mean anybody. Even a karma-yogin is a yati. Yati also means seeker, a mumukshu. The rudi, conventional meaning of yati, however, is sannyasin. This meaning is more popular. The effort of these yatayah, sannyasins or mumukshus, is made for the sake of moksha, mokshartham yatnam.
Visanti, labhante, they gain. Yad vibhrajate tat yatayah visanti, the sannyasins attain this shining, pure ananda.
Sunday, May 30, 2021
NAN PETRA SELVAM
GEETHANJALI
கீதாஞ்சலி --- நங்கநல்லூர் J K SIVAN --
62. When I bring to you coloured toys, my child, I understand why there is such a play of colours on clouds,
When I sing to make you dance I truly Know why there is music in leaves, and why
When I bring sweet things to your greedy hands I know why there is honey in the cup of the flowers and
When I kiss your face to make you smile, my darling, I surely understand what pleasure streams from the sky in morning light, and
என் செல்வமே, கண்ணா, உனக்கு விளையாட நான் கலர் கலராக பொம்மைகள் வாங்கி வந்தேனே, அப்போது தான் எனக்கும் புரிந்தது, ஏன் வானில் மேகங்களுக்கு இத்தனை வண்ணங்கள் என்று, நீருக்கு ஏன் இவ்வளவு வித வித நிறங்கள் என்று, ஏன் எங்கு பார்த்தாலும் பூக்களுக்கு எண்ண முடியாத அளவு வர்ண ஜாலங்கள் என்று, ஆம் குழந்தாய் , உனக்கு நான் விளையாட கலர் கலராக பொம்மைகள் கொடுத்தேனே அப்போது தான் புரிந்தது.
நீ ஆட வேண்டும் என்று நான் பாடினேன் அல்லவா அப்போது தான் காற்றில் இலைகள் அசைந்து பாடுவது ஏன் என்று புரிந்தது. அமைதியாக பார்த்துக் கொண்டு கேட்கும் பூமித்தாயின் இதயம் குளிர ஏன் கடலலைகள் ஓயாமல் சப்தித்துக் கொண்டு கம்பீரமாக ஒன்று சேர்ந்து இசைப்பது ஏன் என்று புரிந்தது. ஆமாம் இது நான் நீ ஆட , பாடினேன் அல்லவா , அப்போது தான் புரிந்தது.
நீ உன் பிஞ்சு கரங்களை ஆசையோடு நீட்டி அத்தனையும் எனக்கு கொடு என்று கேட்கும்போது உனக்கு பிரியமான இனிய வஸ்துக்கள வாரிக் கொடுத்தேனே அப்போது தான் புரிந்தது ஏன் புஷ்பங்கள் சிறிதோ பெரிதோ அதன் வயிற்றில் நிறைய சுவையான தேனைச் சேர்த்து வைத்துக்கொண்டு வண்டுகளுக்காக காத்திருக்கிறது என்று.
எந்தப் பழமும் ஏன் அதற்குள் ஒரு வித சுவையை, இனிப்பை பதமாக கலந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்று அப்போது தான் என் அறிவுக்கு எட்டியது.
ஆமாம் கண்ணா, நீ ஆசையாக , எல்லாமே எனக்கு என்று நீட்டும் உன் ஆசைக் கரங்களை நிரப்ப உனக்கு பிரியமான இனிய வஸ்துக்களை கொண்டு வந்தேனே அப்போது தான் புரிந்தது.
கொடுப்பதில் உள்ள சுகமே தனி கிருஷ்ணா.
நீ ஆசையோடு சிரிக்க உன்னை இருகக் கட்டி,உச்சி முகர்ந்து, அணைத்து இச் இச் என்று மாறி மாறி உன் முகம் நிறைய முத்தங்களைக் கொடுத்தேனே அப்போது தான் புரிந்தது, என் கண்ணே, ஏன் காலை நேர முதல் வெயிலின் தங்க நிற கிரணங்கள் பூமியைத் தொடும் போது, ஆகாயத்திற்கு ஏன் அத்தனை ஆனந்தம் என்று .
அதே போல் என் உடலைக் குளிர்ந்த கோடைத் தென்றல் மென்மையாக தொடர்ந்து வருடும் போது SG கிட்டப்பா பாடுவாரே '' மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே, மென்காற்றின் விளை சுகமே'' என்று அதேதான், அதே தான், அது ஒன்றே தான். மேலே வர்ணிக்க வார்த்தை வரவில்லை.
உன்னை ஆசையோடு, நீ சிரிக்க, உன்னை இருகக்கட்டி உச்சி முகர்ந்து அணைத்து முகம் பூரா நான் ''இச் இச்'' தரும்போது கிடைத்த சுகம். ஆஹா கிருஷ்ணா என் தெய்வமே அது அலாதி இன்பமடா.
பகவானே இந்த சுகமெல்லாம் நீ தருவது, நான் மகிழ நீ யோசித்து முடிவெடுத்துத் தந்த இணையற்ற இனிய சுகங்கள் வேறெதுவோடும் ஒப்பிட முடியாதவை. உன் புன்னகை ஒன்றே போதுமே விளக்குவதற்கு...









